சொத்துப் பிரச்சனையில், தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தம்பி..!

0 1710

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சொத்துப் பிரச்சனையில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டான்.

விளைசித்தேரி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான புருஷோத்தமன், ரமேஷ், ராஜசேகர் ஆகியோருக்கு அவர்களது பூர்வீக வீடு 3 பாகங்களாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் மூத்தவரான புருஷோத்தமன் தனது தம்பி ரமேஷ்க்கு சொத்தின் பங்காக வழங்க வேண்டிய 7 லட்சம் ரூபாயில் ஒரு லட்ச ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி 6 லட்ச ரூபாயைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த ரமேஷ், வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த புருஷோத்தமன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார் என்று கூறப்படுகிறது. தீயில் கருகியபடி வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த புருஷோத்தமன், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 2 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments