சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து..!

0 3936
சீனாவில் தொடர்ந்து 5ஆவது நாளாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் தொடர்ந்து 5ஆவது நாளாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவுவதை அடுத்து, 40 லட்சம் பேர் வரை வசிக்கும் லான்சோ மாகாணத்தில், மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், பள்ளிகள், சுற்றுலாத் தலங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments