கும்பகோணத்தில் 11 மாத குழந்தை கடத்தல் ; 2 பேர் கைது

0 1462
கும்பகோணத்தில் 11 மாத குழந்தை கடத்தல் ; 2 பேர் கைது

கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரம் பகுதியில் நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த 11 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏழுமாந்திடல் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மீனாட்சி என்ற பெண், கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தன் 5 குழந்தைகளையும் அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

கடந்த 15ஆம் தேதி திடீரென வந்த அவரின் கணவர் மைக்கேல், குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். படிப்பு பாதிக்கக்கூடும் என்பதால் குழந்தைகளை அனுப்ப மனைவி மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த மைக்கேல், மனைவிக்கு ஆதரவாக இருந்த தம்பதியின் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், மைக்கேலை பிடித்து விசாரணை செய்த போது மனைவியை மிரட்டுவதற்காக, குழந்தையை கடத்தப்பட்டது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments