நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ; 4 பேர் படுகாயம்

0 1382
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தரங்கம்பாடியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 பேரும் கோடியக்கரை கடற்கரையில் இருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு தெற்கே மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது, ஸ்ரீ ஐய்யனார் துணை என்று எழுதப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த படகில் வந்த ஐந்து பேரில் 2 பேர் குப்புசாமியின் படகில் ஏறி, கையில் வைத்து இருந்த இரும்பு குழாயால் தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கும் போது படகில் வலை சிக்கி சேதமடைந்ததால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments