தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக தேவையான உரத்தை உடனடியாக வழங்க வேண்டும் ; மத்திய உரத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1690
தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக தேவையான உரத்தை உடனடியாக வழங்க வேண்டும்

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு அவரிடம் நேரில் வழங்கினார்.

தமிழகத்தில் நடப்பு பருவத்தில் 125 லட்சம் மெட்ரிக் டன் சம்பா உற்பத்தி என்ற இலக்கை அடைய ஏதுவாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை குறித்த நேரத்தில் உடனடியாக வழங்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

 தமிழகத்துக்கு கூடுதலாக 25 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் MOPயும் வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments