64 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ; தீயிலிருந்து தப்பிக்க 19 வது மாடியில் இருந்து கீழே குதித்தவர் உயிரிழப்பு

0 2811
குடியிருப்பு கட்டடத்தின் 19-வது மாடியில் தீ விபத்து

 

தெற்கு மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள 64 மாடிகள் கொண்ட One Avighna Park குடியிருப்பின் 19-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கட்டடத்தின் பாதுகாவலராக வேலை செய்த Arun Tiwari, தீ பரவ ஆரம்பித்த பின், தரை தளத்திலிருந்து தீ ஏற்பட்ட தளத்துக்கு சென்று பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஒரு வீட்டின் பால்கனியில் மாட்டிக்கொண்ட அவர், தீயிலிருந்து தப்பிக்க பால்கனியின் நுனியில் தொங்கிய நிலையில், தீயின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கமுடியாமல் 19-வது மாடியிலிருந்து கீழே விழுந்த காட்சி வெளியாகியுள்ளது.

கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தீ விபத்தில் சிக்கிய 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments