காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவமனை தொடங்க தமிழக அரசு திட்டம் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1409
காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவமனை தொடங்க தமிழக அரசு திட்டம்

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை தொடங்கி வைத்தபின் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 98 இடங்களில் இந்த வாகனம் சென்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

தற்போது 66 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என குறிப்பிட்டார்.

மேலும், 2ஆம் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் பயனடையும் நோக்கில் முகாம்கள் நடத்தப்படுவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments