பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 2667

தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல் நடப்பதாகவும், சில தனியார் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவும், குற்றச்சாட்டுக்கான உரிய ஆதாரங்களை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தவில்லை என்றால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்காக எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அண்ணாமலை பேசி வருவதாக சாடினார். மேலும், அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments