நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. வல்லுநர் குழு அறிக்கை

0 4348

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நடிகர் விவேக் உயிரிழக்கவில்லை என்றும், உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளே அவர் இறந்ததற்குக் காரணம் என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனை அடுத்து, அவர் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில், விவேக் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விவேக்கின் உயிரிழப்பு தற்செயலானது என்றும் கொரோனா தடுப்பூசிக்கும் அவரது மரணத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments