தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் வீட்டில் சோதனை

0 3532

சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவருக்குச் சொந்தமான 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்து வருகிறார். வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 78 லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புத்திரக் கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீடு, அவர் மாமனார் வீடு, உறவினரின் வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இளங்கோவனின் நண்பர்கள் இருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகிறார்கள். 

திருச்சி மாவட்டம் முசிறியில் இளங்கோவனின் அறக்கட்டளை அலுவலகம், அறக்கட்டளை நிர்வாகியின் வீடு, அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments