ஒரு குடிமகன் என்றும் பாராமல்….. ஒரு பீருக்கே இந்த அடியா..?

0 14757
ஒரு குடிமகன் என்றும் பாராமல்….. ஒரு பீருக்கே இந்த அடியா..?

திருப்பூரில் பட்டப்பகலில் சாலையில் அமர்ந்து மது அருந்திவிட்டு, போதையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற பகல் நேர குடிகாரர்களை பொதுமக்கள் கட்டி வைத்து அடி கும்மி எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

காலையில் எழுந்து காபி குடிப்பது போல் நடுவீதியில் அமர்ந்து மது குடிக்கும் இந்த பகல் நேரக்குடிக்காரர் அமர்ந்திருக்கும் இடம் திருப்பூர் அரிசிகடை வீதி..!

இந்த பகுதியில் ஏராளமான கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் ஏராளமானோர் தேவையான பொருட்களை வாங்க சென்று வருவது வழக்கம். இதனை பயன்படுத்து அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டிலை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது .

இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மது போதையில் இருந்த நபர்களை கைகால்களி கட்டிவைத்து அடி கும்மி எடுத்தனர்

போதைக் கொள்ளையர்கள் குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மது போதையில் இருந்தவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.அரிசி கடை வீதியில் பகல் நேரக்குடிகாரர்களால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments