காதலுக்கு தடை... தாயை தூக்கிலிட்ட விபரீத 2k லவ்வர்ஸ்..!

0 4965
காதலுக்கு தடை... தாயை தூக்கிலிட்ட விபரீத 2k லவ்வர்ஸ்..!

காதலனுடன் வீட்டில் தனியாக இருந்த மகளை கண்டித்த தாய், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வருட காதலுக்கு தடை போட்டதால் தாயிக்கு மரணதண்டனை கொடுத்த விபரீத காதலர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் யடம்மா, இவரது மகள் நந்தினி, கூலி வேலை செய்து தனது மகளை வளர்த்து படிக்கவைத்தார்.

இந்த நிலையில் யடம்மா வீட்டில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததால் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.

சம்பவத்தன்று யடம்மா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் சென்ற போது மகள் நந்தினியும் அவரது காதலன் சோட்டுவும் வீட்டில் இருந்ததாகவும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் யடம்மா தூக்கிட்டுக் கொண்டதாக அவர்கள் வெளியில் வந்து தெரிவித்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதையடுத்து 21 வயதான அவரது மகள் நந்தினியையும் அவரது காதலன் சோட்டுவையும் அழைத்து விசாரித்த போது யடம்மா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஹைதராபாத்தில் புள்ளிங்கோ போல ஊரை சுற்றிய சோட்டுவின் காதல்வலையில் சிக்கிய நந்தினியை அவளது தாய் கண்டித்துள்ளார். காதலனை சந்திக்கவும் தடைபோட்டுள்ளார். சம்பவத்தன்று யடம்மா வேலைக்கு சென்ற பின்னர் காதலன் சோட்டுவை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் நந்தினி. படுக்கை அறையில் காதலன் உடன் தனிமையில் இருந்த போது எதிர்பாரத விதமாக வீட்டுக்குள் நுழைந்த யடம்மா , தனது மகள், காதலனுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து இருவரையும் திட்டித் தீர்த்துள்ளார்.

தனது மகளை கண்டித்ததோடு, காதலனை போலீசில் பிடித்து கொடுப்பதாகவும் கூறி எச்சரித்துள்ளார். இதையடுத்து நந்தினி தனது துப்பட்டாவை எடுத்து தனது தாயின் கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளார். காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்து அதனை மறைப்பதற்காக அவரது சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் தனது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

காதலில் தான் 2 k கிட்ஸ் வேகம் என்றால் காதலுக்கு தடை போடுபவர்களை தட்டுவதிலும் வில்லங்கமாக சிந்தித்து விபரீதமாக வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்த காதலர்கள் இருவரையும் கைது செய்தனர். 

தாயின் கொலையை மறைத்தால், இடையூறின்றி காதல் பறவைகளாய் வானில் சிறக்கடித்து பறக்கலாம் என்று தப்புக்கணக்கு போட்ட இருவரும், சிறகொடிந்த பறவைகளாகி சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments