ரஷ்யாவை மிரட்டும் கொரோனா... ஒரேநாளில் கொரோனாவுக்கு 1,036 பேர் பலி

0 3031

ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்து 36ஆக பதிவாகி புது உச்சம் தொட்டுள்ளது. 36 ஆயிரத்து 339 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை 4 மாதங்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பரவலை கட்டப்படுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த அதிபர் புதின் திட்டமிட்டுள்ள நிலையில் மாகாண சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆளுநர்கள் தடுப்பு நடிவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments