விவசாய நிலங்களுக்கு போர் வெல் தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் ; 300க்கும் அதிகமான போலீசார் குவிப்பு

0 1836
விவசாய நிலங்களுக்கு போர் வெல் தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் நிலத்திலிருந்து, விவசாய நிலங்களுக்கு போர் வெல் தண்ணீர் கொண்டு செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால், அணைப்பகுதியில் 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதி அருகில், தங்கவேல் என்பவரின் நிலத்தில் போர்வெல் அமைத்து, செங்காடு பகுதியில் உள்ள முருகேசன் உள்ளிட்ட 5 பேர், தங்களின் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பைப் லைன் அமைத்தனர். கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிமன்ற உத்தரவு பெற்று, மீதமுள்ள பணியை மீண்டும் தொடர்ந்தனர்.

இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறையும், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என கூறி வாணிப்புத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றத்தை அணுக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments