குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

0 2890

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான வரதராஜ், வருண் குமார் மற்றும் சுதாகர் ஆகிய 3 சிறுவர்களும் பாப்பாந்தாங்கல் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று, அங்குள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள், நீண்ட நேரமாக சிறுவர்களை காணாததால், துணிகள் மட்டும் கரையில் இருந்ததைப் பார்த்து சந்தேகமடைந்து நீரில் இறங்கி தேடிய போது, ஆழமான பகுதியில் மூழ்கி இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

தகவலறிந்து வந்த  போலீசார் சிறுவர்களின் சடலங்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments