பைக் மோதி கீழே விழுந்த பெண் மீது ஏறி, இறங்கிய லாரி –பதைபதைக்கும் சிசிடிவி

0 16317

கோவையில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது, இருசக்கர வாகனம் மோதிய நிலையில், அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தபோது லாரி ஏறி இறங்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சோமனூர் பகுதியில் தேவதர்ஷினி என்பவர் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியபோது, கையில் ஏதோ ஒன்றை பார்த்தப்படி இருபுறமும் சரிவர கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அப்பெண் மீது பலமாக மோதியதை அடுத்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பெண் மீது ஏறி இறங்கிய அடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments