கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் ஆன்லைன் வகுப்பு வாய்ப்பை வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

0 3983
கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும்

கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் ஆன்லைன் வகுப்பு வாய்ப்பையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்ற நீதிபதிகள், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், உலக மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments