கோடநாடு வழக்கு ; கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து மறுவிசாரணை

0 1770
கோடநாடு வழக்கு ; கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து மறுவிசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து மறு விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 2017-ல் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், கனகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் தனபால், கூறியிருந்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கனகராஜின் மரணம் குறித்தும் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதியோடு விசாரணையை துவங்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments