சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ; போலீசார் விசாரணை

0 1726
சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ; போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தனியார் கல்குவாரிக்கு சொந்தமான டிப்பர் லாரி, புக்கசாகரம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது, முன்பக்கம் புகை வருவதை பார்த்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.

அதன்பின் லாரியில் தீ மளமளவென பரவி எரிந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த போதும், டிப்பர் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments