தண்டவாளத்தில் சிக்கிய சரக்கு வாகனம் ; வேகமாக வந்த ரயில் சரக்கு வாகனத்தின் மீது மோதும் வீடியோ வைரல்

0 2678
தண்டவாளத்தில் சிக்கிய சரக்கு வாகனம் ; வேகமாக வந்த ரயில் சரக்கு வாகனத்தின் மீது மோதும் வீடியோ வைரல்

அமெரிக்காவில் வேகமாக வந்த ரயில் ஒன்று சரக்கு லாரி மீது மோதியது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன. ஆக்லஹாமாவில் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், ரயில்வே கிராசிங்கில் இருந்த தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

அப்போது டெக்சாசில் இருந்து ஆக்லஹாமா நோக்கி வந்த ரயில், தண்டவாளத்தில் சிக்கிய வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் சரக்கு வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், அதில் இருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன.

இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 4க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிரக் ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த நாய் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments