குடிபோதைக்கு அடிமையான கணவன் ; கொடுமை தாங்காமல் விபரீத முடிவெடுத்த மனைவி

0 3143
குடிபோதைக்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல் விபரீத முடிவு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, குடிபோதைக்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், கணவனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி - பிரியா தம்பதிக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், மதுவுக்கு அடிமையான கார்த்தி மது அருந்திவிட்டு அடிக்கடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி இரவு முழுவதும் வீடு திரும்பாமல், அதிகாலையிலேயே குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறான். ஆத்திரமடைந்த பிரியா இதனை தட்டிக் கேட்ட போது கார்த்தி தகாத வார்த்தைகளால் பேசியதால், மனமுடைந்து அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த கார்த்தி, முதலில் மதுபாட்டிலால் கழுத்தை லேசாக அறுத்துக் கொண்டதோடு, பின்னர் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments