செய்தியாளரின் செல்போனை பறித்து சென்ற திருடன் ; நேரலை என தெரியாமல் முகத்தை காட்டியதால் போலீசிடம் பிடிபட்டான்

0 1971
நேரலை என தெரியாமல் முகத்தை காட்டியதால் போலீசிடம் பிடிபட்டான்

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் நிலநடுக்கம் குறித்து ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த செய்தியாளரின் மொபைல் போனை பறித்த திருடன் அது நேரலை என தெரியாமல் அதில் முகத்தை காட்டி மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கெய்ரோ மற்றும் எகிப்தின் வேறு சில நகரங்களில் கடந்த செவ்வாய்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து குறிப்பிட்ட செய்தியாளர் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென திருடன் செல்போனை பறித்துச் சென்றான்.

சில வினாடிகளுக்குப் பிறகு அவனது முகமும் பைக் ஒன்றில் அவன் சிகரெட் பிடித்தவாறு செல்லும் நேரடி காட்சிகளும் ஒளிபரப்பாகி அதை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். அதன் பின்னர் அந்த வீடியோ62 லட்சத்திற்கும் அதிகமானாரோல் பகிரப்பட்டது.

அந்த காட்சிகளை வைத்து திருடனை கைது செய்த போலீசார் அந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். பிடிபடுவதற்கு சற்றுமுன் அவன் வியாபாரி ஒருவரிடம் விற்ற அந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலை இல்லாத காரணத்தால் அவன் செல்போனை திருடியதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments