நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் பலி

0 1725
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால், ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்பட்டன.

மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதற்கிடையே கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமான 30-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியாததால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments