காபூலில் பெண்களின் உரிமைகளுக்கு தாலிபான்கள் மதிப்பளிக்க வலியுறுத்தி பேரணி

0 1801
காபூலில் பெண்களின் உரிமைகளுக்கு தாலிபான்கள் மதிப்பளிக்க வலியுறுத்தி பேரணி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்களின் உரிமைகளுக்கு தாலிபான்கள் மதிப்பளிக்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் பெண்களுக்கான மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசில் பெண்களுக்கு எவ்வித முக்கியப் பொறுப்பும் வழங்கப்படாததுடன் குறிப்பிட்ட சில பணிகளில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து கல்வி, பணி மற்றும் அரசியல் பங்கேற்பு உரிமைகளுக்காகப் பதாகைகளை ஏந்தி பெண்கள் பேரணி நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments