சம்பளம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் ; போலீசார் விசாரணை

0 1214
சம்பளம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் ; போலீசார் விசாரணை

தெலுங்கானாவின், மேச்சல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சம்பளம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனரும், உடனிருந்த அவரின் மகனும், ஊழியர்களால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கோச்சாரம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரமேஷ் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், குடும்ப சூழல் காரணமாக அவர் சம்பளம் கேட்டும், தர மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அவரையும், உடனிருந்த அவரின் மகனையும் ஊழியர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments