நேர்மையான அரசு அதிகாரிகள் கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளது-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 2160

நேர்மையான அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் பற்றித் தகவல் அளித்த கிராம உதவியாளரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட திருச்சி கரியமாணிக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் முன்பிணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கிராம உதவியாளரை உப்பில் முழங்கால் போட வைத்துத் தாக்கியதாக வந்த ஊடகச் செய்தியின் அடிப்படையில், தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யாததைச் சுட்டிக்காட்டினார்.

நேர்மையாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு எதிரான நிகழ்வுகளை முறையாகக் கையாளாவிட்டால் அவர்கள் எப்படி நேர்மையாக இருப்பார்கள் என வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments