தடுப்பூசி போடுவதில் 100 கோடி டோஸ்களை கடந்து இந்தியா சாதனை ; உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பாராட்டு

0 2552
சாதனை படைத்த இந்தியாவுக்கு WHO தலைவர் புகழாரம்

தடுப்பூசி போடுவதில் 100 கோடி டோஸ்களை கடந்து சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிசியஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட் பதிவில், பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞானிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்று அபாயத்தில் இருந்த இந்திய மக்களை தடுப்பூசி வாயிலாக பாதுகாத்து, தடுப்பூசி இலக்குகளை எட்டியதற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments