காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கபடும் ; பிரியங்கா காந்தி அறிக்கை

0 3743
ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி& ஸ்மார்ட் போன் இலவசம்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிளஸ் டு பாஸான மாணவிகளுக்கு ஸ்மார்ட் போனும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டியும் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட டுவிட் பதிவு ஒன்றில், தங்களுக்கு பிரியங்கா காந்தி ஸ்மார்ட் போன் தருவார் என மாணவிகள் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உத்தர பிரதேச தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் 40 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என பிரியங்கா காந்தி ஏற்கனவே அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் நவம்பர் 15 ஆம் தேதி வரை மனு கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments