50 பைசாவிற்கு டி.சர்ட்.. அலைமோதிய மக்கள் கூட்டம்..!”லாக் டவுன் கடைக்கு லாக்”

0 3609

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடை திறப்புவிழா சலுகையாக 50 பைசவிற்கு டி.சர்ட் என்று அறிவித்த லாக் டவுன் மென்ஸ் வேர் கடை முன் மக்கள் கூடியதால் போலீசார் கடையை மூடியுள்ளனர்.

காலை 9 மணி கடை திறப்பிற்கு, விடியற்காலையில் இருந்தே அலைமோதிய மக்கள் கூட்டம், முண்டியடித்து டோக்கன் வாங்க சென்ற போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சக வியாபாரிகள் திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தியிடம் புகார் அளித்ததை தொடர்ந்து மணப்பாறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தியதோடு, லாக் டவுன் மென்ஸ் வேர் கடையினை மூடியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments