விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது, பயிற்சி விமானத்தில் இருந்த விமானி பத்திரமாக உயிர் தப்பினார்

0 1752

மத்திய பிரதேச மாநிலத்தில் விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அம்மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் மிரேஜ் 2000 ரக விமானம் திறந்தவெளியில் திடீரென விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நிகழ்ந்ததாக இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், விபத்து நிகழும் முன் விமானத்தில் இருந்து விமானி பாராசூட் உதவியுடன் பத்திரமாக குதித்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments