19 மாதங்களுக்குப் பின் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணை

0 1922

பத்தொன்பது மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் நேரடி விசாரணை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டுக் காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

முதன்மையான வழக்குகளில் மட்டும் நீதிமன்ற அறைகளில் விசாரணை நடைபெற்று வந்தது.

பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும், கொரோனா பரவல் குறைந்துள்ளதாலும் மீண்டும் புதன், வியாழக் கிழமைகளில் நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் நேரடியாக விசாரிக்கப்படும் எனத் தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 19 மாதங்களுக்குப் பின் இன்று முதல் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் நேரடி விசாரணை தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments