தனது விவாகரத்து குறித்து அவதூறு பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா புகார்!

0 4393

தன்னைப் பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக சமந்தா அறிவித்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து நாக சைத்தன்யா - சமந்தா விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பியதாக  சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments