சொந்தமாக 'ட்ரூத் சோஷியல்' என்ற சமூக வலைதளம் தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!

0 2297

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார்.

தனது டிரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் சமூக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் செயலி, அடுத்த மாதம் சில குறிப்பிட்ட பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அமெரிக்கா முழுவதும் அடுத்தாண்டின் முதல்காலாண்டில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாக டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அதற்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments