100வது கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

0 2092

100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற சாதனையை இந்தியா வரலாற்றின் பக்கங்களில் செதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ராம் மனோகர் லால் மருத்துவமனையில் நூறாவது கோடி தடுப்பூசி போடுவதில் நேரில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் அது குறித்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 100 கோடி டோசுகள் என்ற பாதுகாப்பு கவசத்தை, கொரோனாவுக்கு எதிராக இந்தியா உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மருத்துவத்துறையின் வெற்றிக்கும், 130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கும், ஒருங்கிணைந்த உணர்வுக்கும் இது சாட்சியாக உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சாதனை ஒவ்வோரு இந்தியருக்கும் சொந்தமானது என தெரிவித்துள்ள பிரதமர், தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments