இந்தியாவில் 30 சதவிகித பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளனர் - V.K. பால்

0 1755

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோசுகளையும் போட்டுக் கொண்டுள்ளதாக நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர் Dr.VK  பால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், வயது வந்தவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டாலும், இரண்டாம் டோஸ் போட வேண்டிய 25 சதவிகிதம் பேர் இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

அவர்கள் உடனடியாக இரண்டாவது டோசை எடுத்துக் கொள்ளுமாறு நினைவூட்டல் செய்திகள் அனுப்பப்பட உள்ளதாகவும் டாக்டர் வி.கே.பால் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments