பாளையங்கோட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

0 1487

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் அதிகாலை தீவிபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த இழைப்பு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments