திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை... காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன் விஷமருந்திய பெண்

0 2963

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வெள்ளநத்தத்தில் ஆசைகாட்டி ஏமாற்றியவரைக் கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் இளம்பெண் ஒருவர் விஷமருந்தினார்.

திவ்யா என்பவருடன் பழகிய பார்த்திபன் திருமணம் செய்வதாகக் கூறி, கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த இளம்பெண் காவல் நிலையம் முன் விஷமருந்தினார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments