மாயமான மீனவரை கண்டுபிடிக்க நடவடிக்கை தேவை, வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1196

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் துரத்தியதில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் மாயமானார். அவரைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட காலமாகத் தொடர்வதால் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments