காஷ்மீரில் தேடப்பட்டு வந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை... அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி

0 2201

ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2 பேர் சோபியான் மாவட்டத்திலும் இரண்டு பேர் குல்காம் மாவட்டத்திலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனான குல்சார் அகமதுவும் இந்த சண்டையில் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த இரண்டு வாரங்களாக அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த நிலையில் ராணுவமும் காவல்துறையும் பதிலடி கொடுத்து வருகின்றனர். முஸ்லீம் அல்லாத காஷ்மீரிகள் அல்லாத புலம் பெயர்ந்த மக்களைத் தாக்கிய தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்துக் கட்டும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments