ஊராட்சி தலைவர்கள் ஆட்டம் தொடங்கியது.. காசெல்லாம் குத்துறாய்ங்க..!

0 4302

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே  ஊராட்சி மன்ற தலைவி பதவி ஏற்பு விழா திருமண ஊர்வலமாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது கணவருடன் ஜோடியாக மாலை அணிவித்து வலம் வந்த ஊராட்சி தலைவி தம்பதியினருக்கு, பூங்கொத்து கொடுத்தும், மோதிரம் அணிவித்தும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்...

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவியாக அதிமுகவை சேர்ந்த சுந்தரேசன் என்பவரது மனைவி ஜெகதீஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதன்கிழமை காலை அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது கணவருடன் ஜோடியாக மாலை அணிந்து செண்டை மேளங்கள் முழங்க உற்றார் உறவினர்கள் கட்சியினர் புடைசூழ ஊர்வலமாக நடந்து சென்றார்.

ஊராட்சி தலைவி தம்பதிக்கு, அவர்கள் செய்த ஏற்பாட்டில் பூத்தூவி அழைத்துச்செல்லப்பட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவு திருமண ரிஜிஸ்டரில் கையெழுத்திடுவது போல அங்கிருந்த நோட்டில் கையெழுத்திட்டு தலைவியாக ஜெகதீஸ்வரி பதவியேற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து உடன் வந்தவர்கள் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, திருமண வரவேற்பில் மணமக்களுக்கு பரிசளிப்பது போல தங்க மோதிரங்களையும் உறவினர்கள் பரிசளித்தனர்

ஊராட்சி தலைவி ஜெகதீஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் ஒரே மாலையை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு, ஊராட்சி மன்ற வளாகத்தில் தலைவி மரக்கன்றுகளை நட அவரது கணவர் மண் அள்ளிபோட்டார்.

அதே போல தென்காசி மாவட்டம் பெரிய பிள்ளை வலசை கிராம பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி விஜயகாந்த் பாட்டிற்கு ஆதரவாளர்களுடன் ஆடி பாடி பெர்மார்மன்ஸ் கொடுத்து அமர்க்களப்படுத்தினார்.

தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவியக் கனி , கராகாட்ட கலைஞர் போல புடவையில் குத்தப்பட்ட பணத்துடன் பதவி ஏற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments