வேலை நேரத்தில் சீருடையில் மது அருந்திய போலீசார் சஸ்பெண்ட்

0 2311

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பணி நேரத்தின் போது, உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவரும், சீருடையில் மதுபானம் அருந்திய வீடியோ வெளியான நிலையில், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹாசன் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் தலைமை காவலர் ராமேகவுடா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருவரும், வேலை நேரத்தில் இவர்கள் சீருடையில், கட்டிடம் ஒன்றில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக வீடியோ வெளியாகி வைரலானது.

சம்பவத்தை விசாரித்து உறுதிப்படுத்திய ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச கவுடா, போதை எஸ்.ஐ மற்றும் தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments