ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 90 வயது மூதாட்டி பதவியேற்றுக் கொண்டார்

0 1972

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 90வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவியேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து, 1568 வாக்குகள் பெற்று மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஊர் மக்கள் உற்சாகத்துடன் சால்வை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments