இருசக்கர வாகனங்களைத் திருடி மது குடித்து உல்லாசம்.. சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை மடக்கிய போலீசார்

0 1776

சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகளின் வாகனங்களை, மதுகுடிப்பதற்காக திருடி வந்த கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

வில்லிவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்கில், இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்குன்றத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவன் தான், இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்தது உறுதியானது. மது அருந்தி உல்லாசம் அனுபவிக்க, திருடிய வாகனங்களை குறைந்து விலைக்கு விற்று வந்ததாக, அவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறான்.

50க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடுபோனதாக கூறப்படும் நிலையில், அவனிடமிருந்து, 15 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments