முதலமைச்சரின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை குறைத்தமைக்காக, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

0 1815

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்ததற்காக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று முதலமைச்சர் வருகைக்காக, போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனமும் சுமார் 25 நிமிடங்கள் சிக்கிக் கொண்டது.

இதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து தமிழக அரசுக்கு பாராட்டு கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதே நேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments