சிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்.. மருத்துவமனை நிர்வாகம் 11.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு..!

0 4864

குஜராத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறுநீரக கற்களுக்குப் பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தையே மருத்துவர் அகற்றிய சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகம் 11.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு, கே.எம்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவேந்திரபாய் ரவாலுக்கு (Devendrabhai Raval) சிறுநீரக கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறுநீரக கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர், நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

சிறுநீர் கழிப்பதில் தொடர்ந்து சிரமங்களை சந்தித்த ரவால் 4 மாதங்களில் உயிரிழந்தார். இதையடுத்து ராவலின் மனைவிக்கு 11.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மருத்துவமனை மற்றும் காப்பீட்டு நிறுவனத்துக்கு இடையே யார் இழப்பீடு வழங்குவது என்பது தொடர்பாக நீடித்த குழப்பத்தால் இதுவரை இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தது. ராவலின் மனைவி மீண்டும் நுகர்வோர் ஆணையத்தை அனுகினார்.

மருத்துவரின் அலட்சியத்திற்கு காப்பீட்டாளர் பொறுப்பல்ல எனத் தெரிவித்த நுகர்வோர் ஆணையம், மருத்துவமனை நிர்வாகம் 11.25 லட்ச ரூபாய் அபராதத்தை 7.5% வட்டியோடு வழங்குமாறு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments