ஊராட்சிமன்ற அலுவலகத்துக்குள் நுழைந்து தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு, படுகாயங்களுடன் ஊராட்சிமன்றத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி

0 5088

திருவள்ளூர் அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவரான யுவராஜ் என்பவர், காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் வினோத் என்பவருடன் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலில், 3 பேர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று, வீட்டு வரி செலுத்த வேண்டும் எனக் கூறி பேச்சு கொடுத்துள்ளனர்.

அவர்கள் யார் என யுவராஜ் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளனர். படுகாயமடைந்த யுவராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வந்தவர்கள் யார், எதற்காக இந்த கொலை முயற்சி என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments