பஞ்சாப்: தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? : கேள்வி கேட்டவரை ஓங்கி அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

0 4490

பஞ்சாபில் பொதுக்கூட்டத்தின் போது தொகுதிக்கு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதான்கோட் மாவட்டம் Bhoa என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோஜிந்தர் பால் (Joginder Pal) கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், தொகுதி மக்களுக்காக இதுவரை என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

உடனே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இளைஞரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இந்த நிலையில், இளைஞரை மெல்ல அருகில் அழைத்த அந்த எம்.எல்.ஏ. மைக்கை அவர் கையில் கொடுத்துவிட்டு, சரமாரியாக அறையத் தொடங்கினார்.

அப்போது, அங்கிருந்த காவல்துறையினரும், சக காங்கிரஸ் நிர்வாகிகளும் இளைஞரை தாக்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments