மோசமான வானிலை காரணமாக மயங்கி விழுந்து ராணுவ வீரர் உயிரிழப்பு.! சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

0 3225

இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில், முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாலி செட்டியபட்டி சேர்ந்த 42 வயதான சடையப்பன், ராணுவத்தில் நாயக் சுபேதராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் சீனா எல்லை பகுதியான ஓரக் என்னும் இடத்தில் பீரங்கி இயக்கிய போது மோசமான வானிலை காரணமாக சடையப்பன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட நிலையில், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments