ஆசியாவின் 3ஆவது பெரிய ஊராட்சிக்கு பஞ்சாயத்து தலைவரான 23 வயது இளம் பெண்.. சாரல் மழைக்கு இடையே பதவியேற்பு..!

0 2855

கொடைக்கானலில் சாரல் மழைக்கு இடையே வில்பட்டி ஊராட்சி தலைவராக இளம் பெண் பதவியேற்றுக்கொண்டார்.

ஆசியாவிலேயே 3வது பெரிய ஊராட்சி என்று கூறப்படும் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு 10க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.

இங்கு நடைபெற்ற ஊராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலில் 4 ஆயிரத்து 34 வாக்குகள் பெற்று பாக்கியலட்சுமி என்ற 23 வயது இளம்பெண் வெற்றி பெற்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா முன்னிலையில் இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments