பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1633

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு கொன்று வருகின்றனர்.

இந்த நிலையில், சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் லஷ்கர் - இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

அதில் ஒருவன் பெயர் Adil Wani என்பதும், 3 நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கார்பெண்டரை கொலை செய்தவன் என்பதையும் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments